ADDED : செப் 04, 2024 12:55 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே ஆன்மிக தலமான பிரான்மலையில் ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
புகழ் பெற்ற பிரான்மலைக்கு தினமும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர். கோயில் அருகே அமைந்துள்ள நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இங்கு தனியாக பேருந்து நிலையம் இல்லாததால் இந்த நான்கு ரோடு சந்திப்பில் தான் பேருந்து நின்று திரும்பி செல்வது வழக்கம்.இது போன்ற நேரங்களில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்கள் சந்திப்பு வளைவுகளில் திரும்ப முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக சாலைகள் குறுகி டூவீலரில் செல்பவர்கள் கீழே விழும் நிலை உள்ளது. எனவே பிரான்மலை கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.