/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் செயல் அலுவலர் பணியிடம் காலி
/
இளையான்குடியில் செயல் அலுவலர் பணியிடம் காலி
ADDED : செப் 11, 2024 12:15 AM
இளையான்குடி : இளையான்குடி பேரூராட்சியில் செயல் அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால் வளர்ச்சிப் பணிகளில் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான இளையான்குடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இளையான்குடி வளர்ந்து வரக்கூடிய நகரம் என்பதால் இளையான்குடியை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆங்காங்கே புதிதாக குடியிருப்பு உருவாகி வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2மாதங்களுக்கு முன்பு இங்கு செயல் அலுவலராக பணியாற்றிய கோபிநாத் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாறுதலில் சென்றதை தொடர்ந்து இதுவரை இளையான்குடி பேரூராட்சிக்கு புதிதாக செயல் அலுவலர் நியமனம் செய்யாத காரணத்தினால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது.
பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குடிநீர்,தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது.
தற்போது சிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பாக இளையான்குடி பேரூராட்சியை கவனித்து வந்தாலும் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மக்களின் நலன் கருதி இளையான்குடி பேரூராட்சிக்கு செயல் அலுவலர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.