/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பணிக்கு போலி உத்தரவு ரூ.10 லட்சம் மோசடி
/
அரசு பணிக்கு போலி உத்தரவு ரூ.10 லட்சம் மோசடி
ADDED : ஆக 16, 2024 01:01 AM
சிவகங்கை:சிங்கம்புணரியில் உடற்கல்வி ஆசிரியரிடம் ரூ.10 லட்சம் பெற்று போலி அரசு பணி நியமன உத்தரவு வழங்கிய கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மேலவண்ணாரிருப்பு சக்திவேல் 41. தனியார் கல்லுாரி உடற்கல்வி ஆசிரியர். இவரிடம் பிரான்மலையை சேர்ந்த சேவுகமூர்த்தி, மனைவி சாந்தி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினர். இதற்காக சக்திவேலிடம் ரூ.10 லட்சம் வரை வாங்கினர். அரசு வேலைக்கான உத்தரவு எனக்கூறி போலி பணி நியமன உத்தரவை வழங்கி மோசடி செய்தனர். சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சக்திவேல் புகார் அளித்தார். கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.