/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழையால் நிரம்பி வழியும் வயல் விவசாயம் துவக்கிய விவசாயிகள்
/
மழையால் நிரம்பி வழியும் வயல் விவசாயம் துவக்கிய விவசாயிகள்
மழையால் நிரம்பி வழியும் வயல் விவசாயம் துவக்கிய விவசாயிகள்
மழையால் நிரம்பி வழியும் வயல் விவசாயம் துவக்கிய விவசாயிகள்
ADDED : ஆக 27, 2024 05:56 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே தொடர் மழையால் பாசன நிலங்கள் நிரம்பி வழிவதை தொடர்ந்து விவசாயப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியத்தில் சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளது. நிலக்கடலை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நெல் வயல்களில் உழவுப் பணிகளுக்கு தேவையான அளவிற்கு மழை பெய்து தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் முன்கூட்டியே விவசாய பணிகளை துவக்கி உள்ளனர். பலரும் தங்கள் வயல்களில் தழைச்சத்துக்கான செடிகளை போட்டு உழவுப் பணிகளை துவக்கி உள்ளனர்.
இந்தாண்டு கூடுதல் மழை மற்றும் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.