/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேலநெட்டூரில் வாடகை கட்டடத்தில் செயல்படும் ரேஷன் கடையால் அச்சம்
/
மேலநெட்டூரில் வாடகை கட்டடத்தில் செயல்படும் ரேஷன் கடையால் அச்சம்
மேலநெட்டூரில் வாடகை கட்டடத்தில் செயல்படும் ரேஷன் கடையால் அச்சம்
மேலநெட்டூரில் வாடகை கட்டடத்தில் செயல்படும் ரேஷன் கடையால் அச்சம்
ADDED : பிப் 22, 2025 06:30 AM
மானாமதுரை: மானாமதுரை அருகே மேலநெட்டூரில் 2 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேலநெட்டூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் மேலநெட்டூர், காக்குடி, கோவனூர், கீழக்குடியிருப்பு, மணக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். ரேஷன் கடை கட்டடம் மிகவும் சேதமடைந்து எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக வாடகை கட்டடத்தில் போதிய வசதி இல்லாமல் இயங்கி வருகிறது. ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை இருப்பு வைக்க முடியாத நிலை இருப்பதால் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் நலன் கருதி உடனடியாக புதிய ரேஷன் கடை கட்டடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.