/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காவேரிப்பட்டியில் மீன்பிடி திருவிழா
/
காவேரிப்பட்டியில் மீன்பிடி திருவிழா
ADDED : மார் 06, 2025 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் கீழச்சிவல்பட்டி அருகே காவேரிப்பட்டியில் காவேரிக் கண்மாயில் மீன்பிடி விழா நடந்தது. திருப்புத்துார் பகுதியில் கோடை துவங்கியதை அடுத்து, கண்மாய்களில் நீர் வற்றத்துவங்கியுள்ளது.
நீர் குறைந்த கண்மாய்களில் கிராமத்தினர் மீன்களை 'அழி கண்மாய்' எனப்படும் மீன்பிடித் திருவிழா நடத்தி பிடித்து வருகின்றனர். நேற்று காவேரிக் கண்மாயில் கீழச்சிவல்பட்டி பகுதி 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மீன்பிடி விழாவில் பங்கேற்றனர்.