/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சேவினிப்பட்டியில் மீன்பிடி திருவிழா
/
சேவினிப்பட்டியில் மீன்பிடி திருவிழா
ADDED : பிப் 22, 2025 10:54 PM

கீழச்சிவல்பட்டி : திருப்புத்துார் ஒன்றியம் சேவினிப்பட்டியில் நடந்த மீன்பிடி திருவிழாவில் நுாற்றுக்கணக்கான கிராம மக்கள்ஆர்வமாக பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்ட கிராமங்களில் கோடையில் நீர் வற்றிய நீர் நிலைகளில் 'அழிகண்மாய்' நடத்துவர். நேற்று காலை திருப்புத்துார் அருகே சேவினிப்பட்டி குன்றத்தி கண்மாயில் மீன்பிடி விழா நடந்தது.
கீழச்செவல்பட்டி, வேலங்குடி, ஆவணிப்பட்டி, ஆத்திரம்பட்டி மலம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தினர் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான புதுக்கோட்டை திருச்சி பகுதி கிராமத்தினரும் பங்கேற்றனர். ஊத்தா கூடை மூலம் மட்டும் 500-க்கும் மேற்பட்டோர் தலா ரூ.150 கட்டணம் செலுத்தி மீன்பிடித்தனர்.
தொடர்ந்து வலை, பரி, கச்சா, துாரி, கூடை வைத்தும் மீன் பிடித்தனர் கட்லா, லோகு, புள்ளி கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, வயித்து கெண்டை அயிரை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன.