/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருத்தளிநாதர் கோயிலில் நாளை கொடியேற்றம் மே 21 தேரோட்டம், மே 22 தெப்ப உற்ஸவம்

ADDED : மே 11, 2024 11:14 PM
திருப்புத்தூர்:திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 21ல் தேரோட்டமும், மே 22ல் தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். தினசரி இரவில் வாகனங்களில் தேரோடும் வீதிகளில் சுவாமி திருவீதி வலம் வருவர். விழா துவக்கத்தை முன்னிட்டு இன்று மாலை பூர்வாங்க பூஜைகள் நடைபெறும். நாளை காலை 6:00 மணி முதல் காலை 7:15 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.
இரவு சுவாமியும், அம்பாளும் திருவீதி வலம் வருவர். தொடர்ந்து தினசரி வெள்ளிக்கேடகம், பூதம், அன்னம், யானை, பூப்பல்லக்கு, வெள்ளி ரிஷப வாகனம், கைலாயம், சிம்மம், குதிரை வாகனங்களில் இரவு திருவீதி உலா நடைபெறும்.
மே 16ல் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் சார்பில் திருத்தளிநாதருக்கு மந்திர நீர் முழுக்காட்டு, தீபாராதனை நடைபெறும். மே21ல் விநாயகர், சிவகாமி அம்மன், திருத்தளிநாதர் தேரோட்டம் நடைபெறும்.
மே22ல் சீதளி தெப்பக்குளத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.