
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை நகராட்சி 15வது வார்டு அம்பேத்கர் தெருவில் சேகரிக்கும் குப்பையை ஊருணியில் கொட்டி எரிப்பதாக புகார் எழுந்துள்ளது.
நகராட்சி துாய்மை பணியாளர்கள் தெருவில் சேகரிக்கும் குப்பைகளை அருகில் உள்ள ஊருணியில் கொட்டி, தீ வைக்கின்றனர். இதில் இருந்து உருவாகும் புகை மூட்டத்தால், அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் ஊருணியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மழை காலத்தில் இந்த ஊருணியில் மழை நீர் தேங்காமல் விரயமாகும் நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பையை சேகரித்து சுத்திகரிப்பு பணிகளை மட்டுமே செய்ய வேண்டும்.