/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அதிர்வால் 'நொறுங்கிய' அரசு பஸ் கண்ணாடி
/
அதிர்வால் 'நொறுங்கிய' அரசு பஸ் கண்ணாடி
ADDED : ஆக 19, 2024 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் அதிர்வால் அரசு பஸ் முன் கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது.
திருப்புத்துாரில் இருந்து நேற்று மாலை 4:20 மணிக்கு அரசு டவுன் பஸ் காரையூர், மருதிபட்டி, காளாப்பூர், எஸ்.வி., மங்கலம் வழியாக சிங்கம்புணரி நோக்கி சென்றது. திருப்புத்துார் அருகே அச்சுக்கட்டு தெரு வழியாக சென்றபோது பஸ்சில் ஏற்பட்ட அதிர்வால் டிரைவரின் முன் உள்ள இரு கண்ணாடிகளும் நொறுங்கி விழுந்தன.
சத்தம் கேட்டதுடன் பஸ்சும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அலறியடித்து இறங்கினர். பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பிவிட்டு சேதமான பஸ்சை திருப்புத்துார் டெப்போவுக்கு கொண்டு சென்றனர்.