/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் அரசு தொழிற்கல்வி மையம் * பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஆக 16, 2024 04:10 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி தாலுகாவில் அரசு தொழிற்கல்வி மையம் அமைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தாலுகாவில் பிரான்மலை, எஸ்.புதூர் உள்ளிட்ட பகுதியில் மக்கள் பொருளாதாரம், கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இப்பகுதியில் பெரும்பாலும் விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பலரும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். வெளிநாடுகளில் போலி ஏஜெண்டுகளை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாறுவது தொடர்கிறது. இத்தாலுகாவில் அரசு தொழிற்கல்வி மையம் அமைந்தால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று ஏமாறுபவர்களை மடைமாற்றி கல்வி மையங்களில் படிக்க வைத்து வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரலாம். இது பற்றி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்கள் பயன்பெறும் வகையில் இங்கு அரசு தொழிற்கல்வி மையம் அமைக்க வேண்டும்.