ADDED : மே 08, 2024 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : தமிழகம் முழுவதும் கோடை வெயில் வதைத்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.
மதிய வேளையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர். தற்போது காரைக்குடி சிக்னலில் உள்ள 3 சாலையிலும் காரைக்குடி போலீசார் சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

