/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வருவாய்த்துறையை கலங்கடித்த ‛ஹேக்கர்ஸ்
/
வருவாய்த்துறையை கலங்கடித்த ‛ஹேக்கர்ஸ்
ADDED : செப் 28, 2024 02:41 AM
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நேற்று முன்தினம் அனைத்து வருவாய்த்துறை ஊழியர்களின் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஒரே நேரத்தில் பிளாக் ஆனதால் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாட்களாக ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களின் வாட்ஸ் ஆப்பில் வங்கி ஒன்றின் சின்னத்துடன் அருகிலேயே ரிவார்ட்ஸ் என கூறி குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த லிங்க்கை டவுன் லோடு செய்தால் உங்கள் வங்கி கணக்கில் பாயின்ட்ஸ் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்ஸ் சார்பில் அனுப்பப்படும் அந்த லிங்க்கை டவுன் லோடு செய்தால் உடனடியாக அவரது வாட்ஸ் ஆப் கணக்கு முடக்கப்படுவதுடன் அவர் இணைந்துள்ள குழு உறுப்பினர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கு தெரியாமலேயே பணம் எடுக்கப்படும்.
திருப்புவனத்தைச் சேர்ந்த கொந்தகை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய மூன்று பிர்க்காக்களை சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள், துணை தாசில்தார் ஆகியோர் தனித்தனியாக பிர்கா வாரியாக வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கி அதில் தகவல்களை பகிர்வது வழக்கம்.
நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் தெரியாமல் அந்த லிங்கை டவுன் லோடு செய்ய அவர் இருந்த வாட்ஸ் ஆப் குழு மொத்தமும் பிளாக் செய்யப்பட்டதுடன் புரோபைல் பிக்சரும் மாற்றப்பட்டது. நல்வாய்ப்பாக அந்த எண் அலுவலக எண் என்பதாலும் எந்த ஒரு வங்கி கணக்கிலும் இணைக்கப்படாததால் பணம் தப்பியது. பின் நீண்ட நேரம் கழித்து குரூப் அட்மின் மூலம் டவுன்லோடு செய்த கிராம நிர்வாக அலுவலரை குரூப்பில் இருந்து நீக்கிய பின் குழுவை கலைத்து விட்டு மீண்டும் இணைந்தனர். அறிமுகம் இல்லாத லிங்குகள் உள்ளிட்டவற்றை டவுன் லோடு செய்ய கூடாது. உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஆன்ட்ராய்டு போனை பயன்படுத்த வேண்டும்.