/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை நகராட்சி தெப்பக்குளத்தில் கழிவு தேங்குவதால் சுகாதாரக்கேடு
/
சிவகங்கை நகராட்சி தெப்பக்குளத்தில் கழிவு தேங்குவதால் சுகாதாரக்கேடு
சிவகங்கை நகராட்சி தெப்பக்குளத்தில் கழிவு தேங்குவதால் சுகாதாரக்கேடு
சிவகங்கை நகராட்சி தெப்பக்குளத்தில் கழிவு தேங்குவதால் சுகாதாரக்கேடு
ADDED : மார் 07, 2025 08:04 AM
சிவகங்கை : சிவகங்கையில் உள்ள தெப்பக்குளத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுமாறு கலெக்டர் ஆஷா அஜித்திடம், நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தினர்.
சிவகங்கையில் கவுரி விநாயகர் கோயில் எதிரே 5 ஏக்கர் பரப்பளவில் தெப்பக்குளம் உள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் இந்த தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்கும் நோக்கில், பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை நேரடியாக தெப்பக்குளத்தில் சேகரம் செய்தனர். இதன் மூலம் தெப்பக்குளத்தில் நீர் வற்றாமல், நகர் பகுதி ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து காணப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளாக பெரியாறு அணையில் இருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர இந்த அரசு முயற்சிக்கவில்லை. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையினால், நகரில் சேகரமான மழை நீர் தெப்பக்குளத்தில் தேங்கியது. இந்த தெப்பக்குளத்தில் கழிவு மற்றும் மருத்துவ கழிவு கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்.
மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தெப்பக்குளத்தை சுத்தமாக நகராட்சி நிர்வாகம் வைத்துள்ளதா என கண்காணிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை மீறி, தெப்பக்குளத்தில் கழிவுகளை கொட்டி நீரினை அசுத்தம் செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி கோரிக்கை
தெப்பக்குள கழிவுகளை அகற்றி, சுற்றிலும் வேலி அமைத்து நீரினை பாதுகாக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையிலான நிர்வாகிகள் கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.