/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தி.மு.க., கூட்டணிக்கு மாற்று பா.ஜ., என நிரூபிக்கப்படும் எச்.ராஜா நம்பிக்கை

ADDED : ஏப் 20, 2024 02:17 AM
காரைக்குடி:தி.மு.க., கூட்டணிக்கு மாற்று பா.ஜ.,தான் என்பது இந்த தேர்தலில் நிரூபிக்கப்படும் என பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தி.மு.க.,விற்கு பிரதான போட்டியாளர் தேசிய ஜனநாயக கூட்டணி தான். காங்., தேர்தல் அறிக்கையில் பெண்ணுக்கு ரூ. ஒரு லட்சம் என்பது சாத்தியமில்லை. பல நாடுகளின் பட்ஜெட்டை ஒன்றாக்கினால் கூட அந்த தொகை வராது. காங்., ஆட்சியில் 2008 முதல் 2014 வரை பல வங்கிகள் முழுமையாக காலியானது.
2014ல் பா.ஜ., வராவிட்டால் பல இந்திய வங்கிகள் திவாலானதாக அறிவிக்கப்பட்டிருக்கும். இந்த முறை காங்., பல மாநிலங்களில் பூஜ்யம் பெறும். தி.மு.க., கூட்டணிக்கு மாற்று பா.ஜ., என்பது இந்த தேர்தலில் ஓட்டு சதவீதத்தில் நிரூபிக்கப்படும். தமிழகத்தில் பா.ஜ., கூட்டணிக்கு இரட்டை இலக்கத்தில் சீட் கிடைக்கும். அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு செல்லும். இந்த இரண்டு கட்சிக்கும் மாற்று கட்சி பா.ஜ., தான்.