/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திமிலை தொட்டால் துாக்கி எறிவேன்; சக்கந்தியில் மிரட்டிய காளைகள்
/
திமிலை தொட்டால் துாக்கி எறிவேன்; சக்கந்தியில் மிரட்டிய காளைகள்
திமிலை தொட்டால் துாக்கி எறிவேன்; சக்கந்தியில் மிரட்டிய காளைகள்
திமிலை தொட்டால் துாக்கி எறிவேன்; சக்கந்தியில் மிரட்டிய காளைகள்
ADDED : ஆக 17, 2024 12:32 AM
சிவகங்கை : சிவகங்கை அருகே சக்கந்தியில் நடந்த வடமஞ்சுவிரட்டில், திமிலை பிடித்த வீரர்களை காளைகள் துாக்கி எறிந்து, மிரட்டியது.
சக்கந்தியில் உள்ள செங்குளத்து முனியாண்டி கோயில் காளையின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. முதலில் கோயில் காளை அவிழ்க்கப்பட்டது.
வீரர்கள் கோயில் காளையை தொட்டு வணங்கினர். பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் களத்தில் இறக்கிவிடப்பட்டன. ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிடம் ஒதுக்கப்பட்டு, அக்காளையை அடக்க 9 வீரர்கள் வரை இறக்கி விடப்பட்டனர். வடமஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். திமிலை பிடித்து அடக்க வந்த வீரர்களை காளைகள் லாவகமாக துாக்கி வீசியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் விழா கமிட்டி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. காயமடைந்த வீரர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப ஊழியர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

