/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் ஜூன் 4ல் ஓட்டு எண்ணும் பணி 84 மேஜைகளுக்கு 252 பேர் நியமனம்
/
காரைக்குடியில் ஜூன் 4ல் ஓட்டு எண்ணும் பணி 84 மேஜைகளுக்கு 252 பேர் நியமனம்
காரைக்குடியில் ஜூன் 4ல் ஓட்டு எண்ணும் பணி 84 மேஜைகளுக்கு 252 பேர் நியமனம்
காரைக்குடியில் ஜூன் 4ல் ஓட்டு எண்ணும் பணி 84 மேஜைகளுக்கு 252 பேர் நியமனம்
ADDED : மே 23, 2024 03:26 AM
சிவகங்கை: காரைக்குடியில் ஜூன் 4 ல் நடக்க உள்ள சிவகங்கை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் பணியில் நுண் பார்வையாளர், சூப்பர்வைசர், உதவியாளர் என 252 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை (தனி), திருப்புத்துார், ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு ஏப்., 19 ல் நடந்தது. இதில், 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 வாக்காளர்களில், 10 லட்சத்து 49 ஆயிரத்து 675 வாக்காளர்கள் ஓட்டளித்தனர்.
64.25 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. 1,857 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்திய ஓட்டுப்பதிவு, கட்டுப்பாடு மற்றும் ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்கள் காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரிகளின் பாதுகாப்பு அறைகளில் வைத்துள்ளனர்.
இங்கு சுழற்சி முறையில் துணை ராணுவம், 300 போலீசார் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 242 இடங்களில் 'சிசிடிவி கேமரா' கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஜூன் 4ல் ஓட்டு எண்ணும் பணி
சிவகங்கை தொகுதி ஓட்டு எண்ணும் பணி ஜூன் 4 ம் தேதி காலை துவங்குகிறது. ஒரு தொகுதிக்கு 14 மேஜை வீதம் அமைத்து ஓட்டு எண்ணும் பணியை செய்ய உள்ளனர். 6 சட்டசபை தொகுதிக்கும் 84 மேஜைகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு மேஜைக்கு தலா ஒரு ஓட்டு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் என 252 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர ஓட்டு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர் 6 தொகுதிக்கு தலா 18 பேர் வீதம் 36 பேர் இருப்பில் உள்ளனர்.
சீரற்ற மயமாக்கல் பணி
ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் மேற்பார்வையாளர், உதவியாளர்களுக்கான பணி ஒதுக்கீடு சார்ந்த சீரற்ற மயமாக்கல் (ரேண்டமைசேஷன்) பணி நேற்று கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. கலெக்டர் பி.ஏ., (தேர்தல்) ஜான்சன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விஜயகுமார், சரவணபெருமாள், தேர்தல் தாசில்தார் மேசியாதாஸ் பங்கேற்றனர்.

