/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன கேத் லேப் திறப்பு
/
அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன கேத் லேப் திறப்பு
ADDED : மே 14, 2024 12:14 AM

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள மானகிரி அப்போலோ மருத்துவமனையில் நவீன கேத் லேப் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் கூட்டுறவுதுறை அமைச்சர் பெரியகருப்பன், மாங்குடி எம்.எல்.ஏ., புதிய கேத் லேபை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவமனை மதுரை மண்டல முதன்மை செயல் அதிகாரி நீலகண்ணன், மருத்துவமனை நிர்வாகி லாவண்யா மார்க்கெட்டிங் பொது மேலாளர் மணிகண்டன் உட்பட டாக்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரை மண்டல முதன்மை செயல் அதிகாரிநீலகண்ணன் கூறுகையில், அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பம் அனுபவம் வாய்ந்த மருத்துவக்குழு, 24 மணி நேரம் செயல்படும் இதய சிகிச்சை பிரிவின் மூலம் விரிவான இதய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்போது திறக்கப்பட்டுள்ள புதிய கேத் லேப் அதிநவீன தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதால்இதய பாதிப்புகளை ஆஞ்சியோகிராம் மூலம் துல்லியமாக கண்டறிந்து ஆஞ்சியோபிளாஸ்டி, வால்வோபிளாஸ்டி போன்ற இதய சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
திறப்பு விழாவை முன்னிட்டு விரிவான இதய பரிசோதனையை ரூ.999க்கும் ஆஞ்சியோகிராம் ரூ.14,999க்கும் மே 13முதல் ஜூன் 30 வரை வழங்குகிறோம் என்றார்

