/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாலுகா அலுவலக வளாகத்தில் நடமாடும் புரோக்கர்கள் அதிகரிப்பு
/
தாலுகா அலுவலக வளாகத்தில் நடமாடும் புரோக்கர்கள் அதிகரிப்பு
தாலுகா அலுவலக வளாகத்தில் நடமாடும் புரோக்கர்கள் அதிகரிப்பு
தாலுகா அலுவலக வளாகத்தில் நடமாடும் புரோக்கர்கள் அதிகரிப்பு
ADDED : ஆக 23, 2024 04:14 AM
காரைக்குடி தாலுகாவில் கல்லல் மற்றும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய காரைக்குடி கல்லல், மித்ராவயல், பள்ளத்துார், சாக்கோட்டை ஆகிய 5 உள்வட்டங்களும் 64 வருவாய் கிராமங்களும் உள்ளன. மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள தாலுகா அலுவலகம் என்பதால் மக்கள் மாவட்டத்தின் தலைநகருக்கு செல்ல முடியாமல் காரைக்குடி தாலுகா அலுவலகத்தையே நம்பி உள்ளனர்.
சாக்கோட்டை, கல்லல் மற்றும் காரைக்குடி மக்கள் ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
ஆன்லைனில் விண்ணப்பித்தாலும், தாலுகா அலுவலக வளாகத்தில் நடமாடும் புரோக்கர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் சிலர் விண்ணப்பிக்க வரும் மக்களை விசாரித்து தாங்களே அந்த வேலையை முடித்து தருவதாக தெரிவிக்கின்றனர்.
பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம், பிற சான்றிதழ் பெற ரூ.2 ஆயிரம், முதியோர் உதவித்தொகைக்கு ரூ.500 முதல் 2000 வரை வரை பணம் பெறுகின்றனர். தாலுகா அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகள் புரோக்கர்கள் மூலம் பணம் பெற்றுக் கொண்டு அனைத்து வேலைகளையும் செய்வதாக புகார் எழுந்து வருகிறது.
தாசில்தார் ராஜா கூறுகையில்:
பொதுமக்கள் பயன்பெறுவதற்கு பல்வேறு முகாம்கள் நடைபெறுகிறது. அதில் மக்கள் நேரடியாக விண்ணப்பித்து தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பித்து முறையாக சான்றிதழ் பெறலாம். பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் புரோக்கர்களை நாடிச் செல்கின்றனர். சான்றிதழ் மற்றும் பட்டா சம்மந்தமான எந்த தேவையாக இருந்தாலும் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளை சந்திக்கலாம் என்றார்.