தேவகோட்டை:: : * தேவகோட்டை நகராட்சியில் கமிஷனர் பார்கவி தலைமையில், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் கொடியேற்றினார். துணை தலைவர் ரமேஷ், பொறியாளர் மீராஅலி பங்கேற்றனர்.
* தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., பாலகிருஷ்ணன் தலைமையில், ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் கொடியேற்றினார். துணை தலைவர் ராசாத்தி பி.டி.ஓ. சுப்பிரமணியன், கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
* தியாகிகள் பூங்காவில் காங்., கட்சி சார்பில் நகர் தலைவர் சஞ்சய் கொடியேற்றினார். அகில இந்திய உறுப்பினர் மீரா உசேன் தலைமை வகித்தார்.
* தேவகோட்டை டி.எஸ்.பி.அலுவலகத்தில் டி.எஸ்.பி. பார்த்திபன் கொடியேற்றினார். நகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ் ஐ. நமச்சிவாயம் கொடி ஏற்றினார். .
* தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் வெங்கடாசலம் தலைமையில் மதுரை கல்லூரி நூலகர் திருநாவுக்கரசு கொடியேற்றினார்.
* ராமகிருஷ்ண வித்யாலயம் நடுநிலைப் பள்ளியில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்க பட்டய தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில், லயன்ஸ் தலைவர் பாலமுருகன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி பங்கேற்றார்.
* தேவகோட்டை 16 வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கவுன்சிலர் அய்யப்பன் கொடியேற்றினார். அரிஸ்டோ லயன்ஸ் சங்க பட்டய தலைவர் ராம்ராஜ், கவுன்சிலர் நிரோஷா, தலைமை ஆசிரியை வணக்கம் மேரி, எஸ். ஐ. நமச்சிவாயம் பங்கேற்றனர்.
* முத்தாத்தாள் நடுநிலைப் பள்ளியில் கவுன்சிலர் வடிவேல்முருகன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் காளியம்மாள், முன்னாள் தலைமையாசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியை ரத்தினம் பங்கேற்றனர்.
* தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் ஸ்டேட் பாங்க் கிளை மேலாளர் வெங்கடேஷ் கொடியேற்றினார். முதல்வர் நாவுக்கரசு, என்.சி. சி. அதிகாரி மாரி, பொருளியல் துறை தலைவர் பரமசிவன், ஆங்கில துறை தலைவர் அருள்சாமி பங்கேற்றனர்.
* ஆனந்தா கல்லூரியில் கல்லூரியில் ரோட்டரி துணை கவர்னர் கார்த்திகை கொடியேற்றினார். கல்லுாரி செயலர் செபாஸ்டியன், முதல்வர் ஜான் வசந்த்குமார் பங்கேற்றனர்.
* தே-- பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் குமரப்பன் கொடியேற்றினார். பள்ளி தாளாளர் சேவியர்ராஜ், உதவி தலைமையாசிரியர் விக்டர் டிசோசா பங்கேற்றனர்.
* தேவகோட்டை ராம்நகர் ஆக்ஸ்போர்டு நர்சரி, பிரைமரி பள்ளியில் தாளாளர் விஜயன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியை அமுதாராணி பங்கேற்றார்.
* ஜமீன்தார் தெரு உயர்நிலைப்பள்ளியில் அலமேலு கொடியேற்றினார். வீரப்பன், தலைமை ஆசிரியர் வெங்கடேசன் பங்கேற்றனர்.
* தேவகோட்டை யாதவ நர்சரி தொடக்கப்பள்ளியில் அழகப்பா பல்கலை துணை பதிவாளர் பாலசுப்பிரமணியம் கொடியேற்றினார். சங்க அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் பங்கேற்றார்.
* சேவுகன் அண்ணாமலை மெட்ரிக் பள்ளியில், கல்லுாரி பேராசிரியை நாகபர்வதம் கொடியேற்றினார். தலைவர் லட்சுமணன், முதல்வர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளியில் அழகப்பா பல்கலை கழக மகளிர் துறை இயக்குநர் மணிமேகலை கொடியேற்றினார்.
/
///

