ADDED : ஆக 16, 2024 04:16 AM
சிவகங்கை: * மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் கொடியேற்றினார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்று வழங்கினர். குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி பங்கேற்றனர்.
* சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் பள்ளி செயலர் சேகர் தலைமை வகித்தார். பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களின் பெற்றோர் கொடியேற்றினர். தலைமை ஆசிரியர் தியாகராஜன், ஆசிரியர்கள் தடியப்பன், சரவணன், சந்திரசேகர் பங்கேற்றனர்.
* காளையார்கோவில் புனித மைக்கேல் மெட்ரிக் பள்ளியில், ஆரோக்கியசாமி கொடியேற்றினார். பள்ளி முதல்வர் டெய்சி ஆரோக்கிய செல்வி, துணை முதல்வர் முத்துக்குமார் பங்கேற்றனர்.
* கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தெய்வானை கொடிஏற்றினார். முன்னாள் ஊராட்சி தலைவர் வடிவேல், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, கொட்டகுடி ஊராட்சி தலைவர் பாண்டிஅழகு, ஆசிரியர் மீனாட்சி, வாசுகி, ராஜபாண்டி பங்கேற்றனர்.
* கே.ஆர்., மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் சரவணன் கொடியேற்றினார்.
* அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் கிருஷ்ணகுமார் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் பாண்டியராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவநீதம் பங்கேற்றனர்.
* அரசு மகளிர் கல்லுாரியில் முதல்வர் இந்திரா கொடியேற்றினார்.
* தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் கொடியேற்றினார். ஆசிரியர்கள் முத்துலட்சுமி, ஸ்ரீதர் பங்கேற்றனர்.
* நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி., மகளிர் பள்ளியில் பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி கொடியேற்றினார். தலைமை ஆசிரியை மீனாட்சி, பேரூராட்சி துணை தலைவர் கார்த்திகா, பள்ளிக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மேலாளர் சுப்பையா பங்கேற்றனர்.
* முத்துப்பட்டி நம்பிக்கை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் ஆசிரியை சாந்தி கொடியேற்றினார். பள்ளி தாளாளர் கணேசன், ஆசிரியர் அருண்கணேஷ் பங்கேற்றனர்.
* சிவகங்கை அரசு மருத்துவமனையில் டீன் சத்தியபாமா கொடியேற்றினார். துணை முதல்வர் விசாலாட்சி, நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது ரபி, தென்றன், கண்காணிப்பாளர் சிவக்குமார் பங்கேற்றனர்.
* சிவகங்கை நகராட்சியில் தலைவர் துரைஆனந்த் கொடியேற்றினார். கமிஷனர் கிருஷ்ணராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
////