/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கழிவுநீர் கால்வாயை துார்வார பொதுமக்கள் வலியுறுத்தல்
/
கழிவுநீர் கால்வாயை துார்வார பொதுமக்கள் வலியுறுத்தல்
கழிவுநீர் கால்வாயை துார்வார பொதுமக்கள் வலியுறுத்தல்
கழிவுநீர் கால்வாயை துார்வார பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 12, 2024 11:51 PM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை முழுமையாக துார்வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 2007ம் ஆண்டு மார்ச்சில் ரூ.23.5 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் தொடங்கபட்டு முடிந்துஉள்ளது. தற்போது வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது.
நகரில் 80 சதவீத வீடுகளுக்கு இணைப்பு பணி முடிந்துள்ளது. இந்நிலையில் நகரில் உள்ள வார்டுகளில் கழிவு நீர் செல்லும் வகையில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் அடைபட்டு உள்ளது.
போஸ் ரோடு, பஸ் ஸ்டாண்ட் பின்புறம், அரண்மனை வாசலில் இருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் கால்வாய்களில் மழை பெய்தால் மழைநீரும் கழிவு நீரும் சேர்ந்து ரோட்டில் ஓடுகிறது.
நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள கழிவுநீர், மழைநீர் கால்வாய்களை முழுமையாக துார்வார பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

