ADDED : மார் 30, 2024 04:55 AM

காரைக்குடி : சாக்கோட்டை, பள்ளத்துார் பகுதிகளில் விவசாயிகள் கோடை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வானம் பார்த்த பூமியான சாக்கோட்டை பகுதியில் பெரும்பாலும் மழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது.
கடந்த மழைக்காலங்களில் போதிய மழை இல்லாததால் கண்மாய்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால், போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் பலரும் விவசாயத்தில் ஈடுபட முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் பள்ளத்துார், சாக்கோட்டை உட்பட பல பகுதிகளிலும் விவசாயிகள் போர்வெல் மூலம் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டீலக்ஸ், சி.எஸ்.ஆர்., ரக நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் உரம் உழவு விதை கூலி என ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்து வருகின்றனர்.

