/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதல்வர் கோப்பை போட்டி கண்ணங்குடி பள்ளி வெற்றி
/
முதல்வர் கோப்பை போட்டி கண்ணங்குடி பள்ளி வெற்றி
ADDED : செப் 18, 2024 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணங்குடி, : முதல்வர் கோப்பை மாவட்ட விளையாட்டில் கண்ணங்குடி அரசு மேல்நிலை பள்ளி மாணவிகள் கால்பந்து, மேஜை பந்து போட்டியில் வெற்றி பெற்றனர்.
சிவகங்கை விளையாட்டு அரங்கில் நடந்த முதல்வர் கோப்பைக்கான மாவட்ட கால்பந்து போட்டியில் இப்பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்தனர். மேஜை பந்து ஆடவர் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர்.
இப்பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்தமாக ரூ.42,000 பரிசு தொகையை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் எம்.பாக்கியம், உடற்கல்வி ஆசிரியர் பி.மணிமாலா ஆகியோர் பாராட்டினர்.