ADDED : மார் 31, 2024 11:35 PM
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இண்டியாகூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் நடந்தது.
சிவகங்கை தொகுதி காங்., வேட்பாளர் கார்த்தி, முன்னாள் அமைச்சர்ப.சிதம்பரம், எம்.எல்.ஏ.,தமிழரசி, மானாமதுரை நகராட்சி தலைவர்மாரியப்பன்கென்னடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாரியப்பன்கென்னடி பேசுகையில், கார்த்தி தொகுதிக்கே வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.தொகுதிக்கு நலத்திட்டங்களை கொண்டு வர வேண்டும், பல கிராமங்களில் கார்த்தி வெற்றி பெற்ற பின் வந்ததில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது,என்றார்.
இதற்கு பின் பேசிய ப.சிதம்பரம் தொகுதிக்கு கார்த்தி கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். கார்த்தி தொகுதிக்கு வருவதில்லை என்பது வதந்தி. தொகுதி வளர்ச்சிக்கு அதிகளவில் பாடுபட்டவர் கார்த்தி என்றார்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க., வினரே கார்த்தி தொகுதிக்கு வருவதில்லை என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தி.மு.க.,வினரை கார்த்தி மதிப்பதில்லை. எனவே அவருக்கு தேர்தலில் வேலை செய்யக்கூடாது என சமூக வலைதளங்களில் தி.மு.க.,வினர் கச்சை கட்டி வரும் நிலையில் கார்த்தி, ப.சிதம்பரம்ஆகியோரை மேடையில் வைத்து கொண்டே தி.மு.க.,வினர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

