/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் ஆக.26ல் கிருஷ்ண ஜெயந்தி விழா
/
திருப்புத்துாரில் ஆக.26ல் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : ஆக 22, 2024 02:45 AM
திருப்புத்தூர்,: திருப்புத்துார் ஸ்ரீதேவி பூதேவி சமேத நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆக 26 ல் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. பிள்ளையார்பட்டி கோவிந்தானந்தா சுவாமிகள் தலைமை வகிக்கிறார். காலை 10:00 மணிக்கு உற்ஸவ கிருஷ்ணருக்கு அபிேஷக, ஆராதனை நடைபெறும். மாலை 4:00 மணிக்கு மேல் உறியடி விழா நடைபெறும்.
தொடர்ந்து மாலை 6:00 மணிக் பரதநாட்டியம், கோலாட்டம் நடைபெறும். பின்னர் உற்ஸவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். பின்னர் இரவு 8:00 மணிக்கு சேஷ வாகனத்தில் கிருஷ்ணர் திருவீதி உலா நடைபெறும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள், யாதவ உறவின்முறையார் செய்கின்றனர்.