நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சோழபுரம் திருவேட்டை அய்யனார் கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷே விழா நடந்தது.
சோழபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பூர்ண புஷ்கலா சமேத திருவேட்டை அய்யனார் சுவாமி திருக்கோயில்.
இக்கோயிலை புனரமைத்து திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கோயில் முன்பு யாகசாலை அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து யாகசாலை பூஜை நடந்தது.
இரண்டு கால யாகசாலை பூஜையில் மங்கல இசை, திருமுறை பாராயணங்கள், கோபூஜை மற்றும் சுவாமி மூல மந்திரங்கள் கூறி யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் சமர்ப்பித்து பூர்ணாகுதி நடந்தது.
தீப ஆராதனை காண்பிக்கப்பட்டவுடன் கடம் புறப்பாடு நடந்தது. கோயிலை சுற்றி வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க விமானத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

