
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
திருப்புவனத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஏற்கனவே பழைய கட்டடம் இருந்த இடத்தில் செல்வவிநாயகர் ஆலயம் அமைந்திருந்தது.
புதிய கட்டடத்திற்காக செல்வ விநாயகர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது.
கும்பாபிஷேகத்தை செந்தில் தலைமையில் அசோக், விவேக், விக்னேஷ் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
ஒன்றிய தலைவர் சின்னையா, துணை தலைவர் மூர்த்தி, பி.டி.ஓ.,க்கள் பாலசுப்ரமணியன், அருள்பிரகாசம், மேலாளர் குமரேஸ்வரன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

