/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாத்தனுார் கோயிலில் கும்பாபிஷேக பூஜை
/
சாத்தனுார் கோயிலில் கும்பாபிஷேக பூஜை
ADDED : ஜூலை 01, 2024 09:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி:
சாலைக்கிராமம் அருகே உள்ள சாத்தனுார்மகா சாத்தையனார் கோயிலில் கும்பாபிஷேகவிழா நாளை நடைபெற உள்ள நிலையில் யாக சாலை, கோ பூஜை துவங்கியது.
இக் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து நாளை ஜூலை 3ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமத்துடன் முதலாம் கால யாகசாலை பூஜைமற்றும் கோ பூஜை துவங்கின.
தொடர்ந்து 4கால பூஜை நடைபெற்று நாளை 3ம் தேதி காலை 10:00 லிருந்து 10:30 மணிக்குள்கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.