/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊராட்சிகளில் பிளீச்சிங் பவுடர் மூடை கொளுத்தும் வெயில் காலத்தில் எதற்கு
/
ஊராட்சிகளில் பிளீச்சிங் பவுடர் மூடை கொளுத்தும் வெயில் காலத்தில் எதற்கு
ஊராட்சிகளில் பிளீச்சிங் பவுடர் மூடை கொளுத்தும் வெயில் காலத்தில் எதற்கு
ஊராட்சிகளில் பிளீச்சிங் பவுடர் மூடை கொளுத்தும் வெயில் காலத்தில் எதற்கு
ADDED : பிப் 25, 2025 06:47 AM
மானாமதுரை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் தேவை இல்லாத நிலையில் கட்டாயமாக பிளீச்சிங் பவுடர் மூடைகளை இறக்கியுள்ளனர். மேலும் அதற்குரிய பணத்தை உடனே செலுத்துமாறு அதிகாரிகள் கூறுவதால் ஊராட்சி பணியாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பெரும்பாலான ஊராட்சிகளில் தற்போது போதிய நிதி வசதி இல்லாமல் அடிப்படை பிரச்னைகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி போன்றவற்றை செய்ய முடியாமல் பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மாதந்தோறும் சம்பளம் கூட எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் ஊராட்சிகளுக்கு தலா 330க்கும் மேற்பட்ட பிளீச்சிங் பவுடர் மூடைகளை அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் இறக்கி அதற்குரிய தொகையை செலுத்துமாறு பணியாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஊராட்சி பணியாளர்கள் கூறியதாவது:
மக்கள் பிரதிநிதிகளின்பதவிக்காலம் முடிவடைந்து 2 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை பிரச்னைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்டவற்றை செய்வதற்கு கூட நிதி வசதி இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம்.
மேலும் மழைக்காலங்களில் தான் பிளீச்சிங் பவுடர் அதிகமாக தேவைப்படும். ஆனால் தற்போது வெயில் காலம் ஆரம்பித்து பிளீச்சிங் பவுடர் தேவைப்படாத நிலையில் கட்டாயமாக பிளீச்சிங் பவுடர் மூடைகளை அனுப்பி வைத்துள்ளனர். சில ஊராட்சிகளில் பாதுகாப்பாக வைப்பதற்கு இடமில்லாத நிலையில் மொத்தமாக இறக்கி வைத்துள்ளதால் வீணாகி போக வாய்ப்புள்ளது என்றனர்.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
ஊராட்சி பகுதிகளில் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்றும், சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமென்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதையடுத்தும்,பிளீச்சிங் பவுடர் தேவையை கருத்தில் கொண்டும் தான் அனுப்பப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக அனுப்பப்பட்ட ஊராட்சிகளிலிருந்து பிளீச்சிங் பவுடர் மூடைகளை திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.