/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை சப்-டிவிஷனில் போலீஸ் பற்றாக்குறை; தொடரும் திருட்டுக்கள்
/
மானாமதுரை சப்-டிவிஷனில் போலீஸ் பற்றாக்குறை; தொடரும் திருட்டுக்கள்
மானாமதுரை சப்-டிவிஷனில் போலீஸ் பற்றாக்குறை; தொடரும் திருட்டுக்கள்
மானாமதுரை சப்-டிவிஷனில் போலீஸ் பற்றாக்குறை; தொடரும் திருட்டுக்கள்
ADDED : ஏப் 01, 2024 10:14 PM
மானாமதுரை : மானாமதுரை சப் டிவிஷனுக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறையாக இருப்பதால் திருட்டு மற்றும் கொலை சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது. புதியதாக பொறுப்பேற்ற போலீஸ் எஸ்.பி.,டோங்கரே பிரவீன் உமேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மானாமதுரை போலீஸ் சப் டிவிஷனுக்குட்பட்டு மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பழையனூர், பூவந்தி உள்ளிட்ட 6 போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் ஸ்டேஷன் அனைத்திலும் போலீசார் பற்றாக்குறையாக இருப்பதால் தொடர்ந்து ரோந்து பணி மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணி செய்ய போலீசார் இல்லாத காரணத்தினால் தொடர்ந்து திருட்டு மற்றும்கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது.
மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் 1970ம் ஆண்டு மக்கள் தொகை 12 ஆயிரம் பேர் மட்டுமே இருந்த நிலையில் 80 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது 50 வருடங்கள் கழித்து மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மக்கள் தொகை 50 ஆயிரத்திற்கும் மேல் உள்ள நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் அதே 80 பேர் மட்டுமே கொண்ட பணியிடம் உள்ளது.
பற்றாக்குறையாக உள்ள நிலையில் தினந்தோறும் கோர்ட் மற்றும் சம்மன் கொடுத்தல் போன்ற அலுவலகப் பணிகளுக்கு ஏராளமான போலீசார் சென்று விடுவதால் ரோந்துக்கு போலீசார் செல்லமுடியாத நிலை உள்ளது.
மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் நீண்ட காலமாக காலியாக இருப்பதால் திருட்டுக்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
புதிதாக பொறுப்பேற்றுஉள்ள போலீஸ் எஸ்.பி., மானாமதுரை சப் டிவிஷனுக்குட்பட்ட ஸ்டேஷன்களில் தேவையான போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

