/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அவசர தேவைக்கு திருடியதாக திரும்ப கிடைத்த பைக்கில் கடிதம்
/
அவசர தேவைக்கு திருடியதாக திரும்ப கிடைத்த பைக்கில் கடிதம்
அவசர தேவைக்கு திருடியதாக திரும்ப கிடைத்த பைக்கில் கடிதம்
அவசர தேவைக்கு திருடியதாக திரும்ப கிடைத்த பைக்கில் கடிதம்
ADDED : பிப் 26, 2025 02:02 AM

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், பழையூரைச் சேர்ந்தவர் வீரமணி. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், தன் மனைவி அம்பிகா பெயரில் ஆறு மாதங்களுக்கு முன், 1.30 லட்சம் ரூபாய் மதிப்பில் டூ - வீலரை வாங்கியுள்ளார்.
பிப்., 20 இரவு, வீட்டின் முன் நிறுத்தப்பட்ட டூ - வீலர் திருடு போனது. திருப்புவனம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, அதே பகுதியில் திருடு போன டூ - வீலர் திரும்ப கிடைத்தது.
டூ - வீலர் முன்புறம், வெள்ளை தாளில், 'பிளாக் பாண்டா பயலுக' என்ற பெயரில், ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அதில், 'அவசர தேவைக்காக டூ - வீலரை திருடி, 450 கி.மீ., துாரம் ஓட்டினோம். அதற்கான சேதத்திற்கு, 1,500 ரூபாய் வைத்துள்ளோம். டூ - வீலர் திருடியதற்கு என்னை திட்டியிருப்பீர்கள். மீண்டும் வைத்துள்ளேன். வருத்தப்படணும்; இல்லை என்றால் வருந்த வைப்போம்' என, எழுதப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட போலீசார், கடிதம் எழுதிய, 'பிளாக் பாண்டா பயலுக'ளை தேடி வருகின்றனர்.

