/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் பார்சல் சாம்பாரில் பல்லி
/
காரைக்குடியில் பார்சல் சாம்பாரில் பல்லி
ADDED : ஆக 28, 2024 07:30 AM

காரைக்குடி, : காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு மகப்பேறு சிகிச்சைக்கு வந்த பெண், ஓட்டலில் வாங்கி வந்த சாம்பாரில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனைக்கு வெளியே இருந்த ஒரு ஓட்டலில் இட்லி மற்றும் சாம்பார் வாங்கி வந்து பலர் சாப்பிட்டு உள்ளனர். இந்நிலையில், சிகிச்சையில் உள்ள ஒரு பெண் பார்சலை பிரித்து சாம்பாரை ஊற்றிய போது அதில் பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை.
மருத்துவ அதிகாரிகள் கூறுகையில்: மருத்துவமனையில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவிற்கு தரத்துடன் உணவு வழங்கப்படுகிறது.