/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரிக்கு வராத மதுரை கிளை அரசு பஸ்களால் பயணிகள் தவிப்பு
/
சிங்கம்புணரிக்கு வராத மதுரை கிளை அரசு பஸ்களால் பயணிகள் தவிப்பு
சிங்கம்புணரிக்கு வராத மதுரை கிளை அரசு பஸ்களால் பயணிகள் தவிப்பு
சிங்கம்புணரிக்கு வராத மதுரை கிளை அரசு பஸ்களால் பயணிகள் தவிப்பு
ADDED : ஆக 20, 2024 07:17 AM
சிங்கம்புணரி : மதுரை அரசு போக்குவரத்து கிளை பஸ்கள் சிங்கம்புணரிக்கு வராததால், தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டநெரிசலில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிங்கம்புணரி, பிரான்மலை சுற்றுவட்டார பள்ளிகளில் மதுரை பகுதியை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பகுதி மக்கள் வியாபாரம் நிமித்தமாக மதுரையை சார்ந்திருக்கின்றனர்.
மதுரையில் இருந்து சிங்கம்புணரி வழியாக பொன்னமராவதிக்கு 10க்கும் மேற்பட்ட தனியார், அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் மதுரை சிப்காட் கிளையிலிருந்து இயக்கப்படும் ஒரு அரசு பஸ் வாரத்தில் மூன்று நாட்கள் வருவதே இல்லை. மற்ற நாட்களில் கூட உரிய நேரத்திற்கு பஸ் வருவதில்லை.
அதற்கடுத்து வரும் தனியார்பஸ்களின் வருமானத்திற்காக சில டிரைவர், கண்டக்டர்கள் இப்படி செய்வதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஆக.18, 19 தேதிகளில் அரசு பஸ் சிங்கம்புணரிக்கு வரவில்லை.
அரசு பஸ் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.