/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை விழா: மே 16ல் துவக்கம்
/
மானாமதுரை சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை விழா: மே 16ல் துவக்கம்
மானாமதுரை சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை விழா: மே 16ல் துவக்கம்
மானாமதுரை சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை விழா: மே 16ல் துவக்கம்
ADDED : மே 02, 2024 05:27 AM
மானாமதுரை:மானாமதுரையில் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் 44 வது ஆண்டு ஆராதனை விழா மே 16 மற்றும் 17 ல் நடக்கிறது. இதில் கர்நாடக இசைகலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்படும் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதி மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஆராதனை விழா நடைபெறும். இவ்விழாவில் ஏராளமான கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்துவார்கள்.
மே 16ல் ஆராதனை விழா
இந்த ஆண்டுக்கான ஆராதனை விழா மே 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்கள் நடக்கிறது. விழாவில் உஞ்சவ்விருத்தி, கோஷ்டி கானம், விக்னேஸ்வர, வடுக, கன்யா சுவாசினி, தம்பதி பூஜைகள், இசை நிகழ்ச்சி, சொற்பொழிவுகள், பாராட்டு விழாக்கள் நடைபெற உள்ளது. சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை குழு டிரஸ்டிகள் ராஜாராவ், ஸ்ரீவித்யா ராஜகோபாலன், ஸ்ரீதரன், ஸ்ரீராமன், சுந்தரம், முரளி செய்து வருகின்றனர்.