/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வீர அழகர் கோயில் பக்தி உலாத்தல்
/
மானாமதுரை வீர அழகர் கோயில் பக்தி உலாத்தல்
ADDED : ஏப் 26, 2024 12:52 AM

மானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நேற்று முன்தினம் வைகை ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த மானாமதுரை கிராமத்தார்கள் மண்டகப்படியில் நடைபெறும் பக்தி உலாத்தல் நிகழ்ச்சிக்காக வீர அழகருக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு சர்வ அலங்காரங்களுடன் எழுந்தருளினார்.
மானாமதுரை கிராமத்தார்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வைகை ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிக்கு வந்து வீர அழகரை வழிபட்டு சென்றனர். நேற்று அதிகாலை மண்டகப்படியிலிருந்து கருட வாகனத்தில் வீதி உலா சென்று தசாவதார நிகழ்ச்சிக்காக கோர்ட்டார் மண்டகப்படிக்கு சென்றடைந்தார். ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன்,அர்ச்சகர் கோபி மாதவன்(எ) முத்துச்சாமி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

