/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் பூக்காத மா மரங்கள்; விவசாயிகள் தவிப்பு
/
திருப்புவனத்தில் பூக்காத மா மரங்கள்; விவசாயிகள் தவிப்பு
திருப்புவனத்தில் பூக்காத மா மரங்கள்; விவசாயிகள் தவிப்பு
திருப்புவனத்தில் பூக்காத மா மரங்கள்; விவசாயிகள் தவிப்பு
ADDED : மே 27, 2024 05:53 AM
திருப்புவனம் : திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்தாண்டு மா மரங்கள் பூக்காததால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
திருப்புவனம் தாலுகாவில் பூவந்தி, கிளாதரி, கலியாந்தூர், கானூர் உள்ளிட்ட பகுதிகளில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இதில் அதிகளவாக பூவந்தியில் 200க்கும் மேற்பட்ட மா மரங்கள் உள்ளன.
பூவந்தி, கிளாதரி, லட்சுமிபுரம், அரசனூர் உள்ளிட்ட பகுதிகளில் பெங்களுரூ கிரேப், அல்போன்சா, சப்போட்டா, இமாம்சந்த் உள்ளிட்ட மா மர வகைகள் வளர்க்கப்படுகின்றன.
வருடம் முழுவதும் ஏக்கருக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்ச ரூபாய் வரை செலவு செய்கின்றனர்.
நவம்பர் மழையில் பூ பூத்து, டிசம்பரில் காய் பிடித்து மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பழங்களின் விளைச்சல் அதிகரிக்கும். இந்தாண்டு போதிய மழையும் இல்லை. டிசம்பரில் பனிப்பொழிவும் இல்லை. ஜனவரி முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மரங்கள் பாதிக்கப்பட்டன. மருந்துகள் தெளித்தும் பூக்களே வரவில்லை.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: பூவந்தி, கிளாதரியில் இயற்கை முறையில் மா மரங்கள் வளர்க்கப்படுகின்றன. மருந்துகள் எதுவும் தெளிப்பதில்லை.
எனவே கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். இந்தாண்டு கோடை வெயிலால் காரணமாக பூக்களே உற்பத்தியாகவில்லை. வருடம் முழுவதும் தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து பராமரித்தும் பூக்கள் உற்பத்தியாகாததால், விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளன.

