/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிற மாநில மிளகாய் வரத்தால் மார்க்கெட் சரிவு
/
பிற மாநில மிளகாய் வரத்தால் மார்க்கெட் சரிவு
ADDED : பிப் 25, 2025 06:45 AM

எஸ்.புதுார்: பிற மாநிலங்களில் இருந்து வரும் மிளகாயால்உள்ளூர் மிளகாய் விலை வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
எஸ்.புதுார் ஒன்றியத்தில் இந்தாண்டு விவசாயிகள் 400க்கும் மேற்பட்ட ஏக்கரில் குண்டு, சம்பா மிளகாய் ரகங்களை சாகுபடி செய்திருந்தனர்.
குறிப்பாக தர்மபட்டி, முசுண்டபட்டி, வலசைபட்டி, கே.புதுப்பட்டி, புழுதிபட்டி, செட்டிகுறிச்சி ஆகிய பகுதிகளில் பல விவசாயிகள் மிளகாய்மட்டுமே சாகுபடி செய்துள்ளனர்.
கார்த்திகையில் நடவுப் பணிகள் முடிந்த நிலையில் கடந்த மாதம் காய் எடுப்புக்கு வந்தது. அப்போது கிலோ 44 ரூபாய்க்கு சென்றது. தற்போது 60 சதவீதம் வரை விலை குறைந்து 18 ரூபாய்க்கு மட்டுமே செல்கிறது. இதனால் மிளகாய் பயிரிட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இன்னும் சில மாதங்கள்காய்ப்பு இருக்கும் நிலையில் இந்த விலை கூலிக்கு கூட கட்டுபடியாகாது என்கிறார்கள். வழக்கமாகசம்பா மிளகாயை விட குண்டு மிளகாய் 5 ரூபாய் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது இரண்டும் ஒரே விலைக்கு வந்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகத்தில் இருந்து மிளகாய் வரத்து அதிகரித்துள்ளதாலேயே இப்பகுதியின் மிளகாய் விலை வீழ்ச்சியடைந்துஉள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விளைச்சல் பாதிப்பு
இளையான்குடி: இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் குண்டு மிளகாய் செடிகளுக்கு போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட இளையான்குடி, சூராணம், முனைவென்றி, சாலைக்கிராமம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் குண்டு மிளகாய் விளைவிக்கப்படு கிறது. மேலும் இதனை ஒட்டிய ராமநாதபுரம் மாவட்ட கிராம பகுதிகளிலும் இந்த மிளகாய் விளைவிக்கப்படுகிறது.
கடந்த பருவ மழையின் போது போதிய மழை இல்லாத காரணத்தினால் மிளகாய் செடிகளுக்கு முன் பருவத்திலும், பின் பருவத்திலும் போதிய தண்ணீர் இல்லாமல் செடிகள் கருகி அதிகளவில் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இளையான்குடி மிளகாய் விவசாயிகள் கூறியதாவது:
இந்த வருடம் ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்தில்இருந்து ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் போதிய மழை பெய்யாமல் தண்ணீர் இல்லாமல் மிளகாய் மகசூல் பெருமளவில் குறைந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு 50 மூடைகள்கிடைத்த நிலையில் இந்த வருடம் 10 மூடை கிடைப்பதே அரிதாக உள்ளது, அதிலும் மிளகாய்கள் சோடையாக இருப்பதினால்மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளோம், என்றனர்.