/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டோரத்தில் தேங்கிய மணல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
ரோட்டோரத்தில் தேங்கிய மணல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ரோட்டோரத்தில் தேங்கிய மணல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ரோட்டோரத்தில் தேங்கிய மணல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 16, 2024 04:11 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குவிந்து கிடக்கும் மணலால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது.
இப்பேரூராட்சி வழியாகச் செல்லும் காரைக்குடி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சில மாதங்களாக புழுதி மணல் தேங்கிக் கிடக்கிறது. பெரிய வாகனங்களுக்கு வழி விடும்போது டூவீலர்களில் செல்பவர்கள் மணலில் வழுக்கி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. மேலும் காற்றடிக்கும் நேரங்களில் பறந்து வரும் துாசி வாகன ஓட்டிகளின் கண்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இந்நிலையில் ரோட்டோரங்களில் தேங்கியுள்ள மணலை நெடுஞ்சாலைத்துறை கண்டு கொள்வதில்லை, பேரூராட்சி நிர்வாகம் அவ்வப்போது சில இடங்களில் மட்டும் மணலை அப்புறப்படுத்துகின்றனர். முழு அளவில் மணலை அப்புறப்படுத்தாததால் அடிக்கடி விபத்து தொடர்கிறது. எனவே வேட்டையன்பட்டியில் இருந்து சேவுகப்பெருமாள் கோயில் வரை ரோட்டோரத்தில் குவிந்துள்ள மணலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையும், பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

