/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாட்டரசன் கோட்டை கோயிலில் முளைப்பாரி விழா
/
நாட்டரசன் கோட்டை கோயிலில் முளைப்பாரி விழா
ADDED : ஜூன் 27, 2024 11:37 PM
சிவகங்கை : நாட்டரசன்கோட்டை கண்ணுடை நாயகி அம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி திருவிழா ஜூலை 13 ல் துவங்குகிறது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில், ஆடி முளைப்பாரி திருவிழா ஜூலை 13 அன்று மாலை 6:30 மணிக்கு முளைப்பாரிக்கான விதைப்பரப்புதல் நிகழ்வுடன் துவங்குகிறது.
ஜூலை 20 அன்று மாலை 6:30 மணிக்கு முளைப்பாரிகளை பெயர்த்து வைத்தல், ஜூலை 21 அன்று காலை 10:00 மணிக்கு கண்ணுடைய நாயகி அம்மன் தங்க முளைப்பாரியை தலையில் ஏந்தி, திரு வீதி உலா நடைபெறும்.
ஜூலை 22ம் தேதி மாலை 6:30 மணிக்கு தைலக்காப்பு உற்ஸவமும், இரவு 7:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெறும். விழாவை முன்னிட்டு தினமும் மாலை 6: 30 மணிக்கு கண்ணுடைய நாயகி அம்மன் திருவீதி உலா நடைபெறும்.
அதனை தொடர்ந்து முளைக் கொட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். ஆடி முளைப்பாரி விழா ஏற்பாட்டை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா செய்து வருகின்றனர்.

