/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கைக்கு புதிய பஸ் ஸ்டாண்ட்; இடம் ஒதுக்க நகராட்சி தலைவர் மனு
/
சிவகங்கைக்கு புதிய பஸ் ஸ்டாண்ட்; இடம் ஒதுக்க நகராட்சி தலைவர் மனு
சிவகங்கைக்கு புதிய பஸ் ஸ்டாண்ட்; இடம் ஒதுக்க நகராட்சி தலைவர் மனு
சிவகங்கைக்கு புதிய பஸ் ஸ்டாண்ட்; இடம் ஒதுக்க நகராட்சி தலைவர் மனு
ADDED : செப் 11, 2024 12:14 AM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நிர்வாக அனுமதி வழங்கிட உதவிடுமாறு நகராட்சி தலைவர் துரைஆனந்த் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியிடம் மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை நகராட்சி வருவாய் மற்றும் மக்கள் தொகையின் அடிப்படையில் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளது. பொதுமக்கள் மற்றும் நகருக்கான பல நலத்திட்டப்பணிகளை நிறைவேற்றும் விதமாகவும், அரசிற்கான வருவாயினை பெருக்க ஏதுவாக சிவகங்கை நகராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிகளை இந்நகராட்சியுடன் ஒன்றிணைத்து தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த அனுமதி வழங்கிட வேண்டும்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் சிரமம் இன்றி போக்குவரத்தை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிவகங்கை நுழைவு வாயில் பகுதியில் காணப்படும் அரசு புறம்போக்கு நிலத்தில் சிவகங்கை பஸ் ஸ்டாண்டிற்கு இடத்தை ஒதுக்கீடு செய்து, புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டடம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கிட வேண்டும்.
சிவகங்கை நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைத்துக்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.