/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி விலக்கில் புதிய மேம்பால பணி: அடுத்த மாதம் தொடக்கம்
/
கீழடி விலக்கில் புதிய மேம்பால பணி: அடுத்த மாதம் தொடக்கம்
கீழடி விலக்கில் புதிய மேம்பால பணி: அடுத்த மாதம் தொடக்கம்
கீழடி விலக்கில் புதிய மேம்பால பணி: அடுத்த மாதம் தொடக்கம்
ADDED : மார் 11, 2025 05:02 AM
கீழடி: கீழடி விலக்கில் தொடர்ந்து விபத்து நடந்து வருவதை அடுத்து உயர் மட்ட மேம்பால கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையில் கீழடி விலக்கு, நரிக்குடி விலக்கு, பிரமனூர் விலக்கு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி விபத்து நேரிட்டு வருகின்றன. இதனை தடுக்க இந்த இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என ஆய்வுகள் தெரிவித்ததையடுத்து கீழடி விலக்கில் ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு புதிதாக மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
2023ல் வருவாய்த்துறையினர் நான்கு வழிச்சாலையை ஒட்டி நிலம் கையகப்படுத்தப்படுத்தினர். இரு ஆண்டுகளுக்கு பிறகு மேம்பாலம் கட்டும்பணி அடுத்த மாதம் தொடங்க உள்ளதையடுத்து பாலம் அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் நேற்று தொடங்கியுள்ளது.
கீழடி விலக்கில் பாலம் அமைப்பதற்காக அதிகாரிகள் அளவீடு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.