/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அங்கன்வாடி அருகே திறந்து கிடக்கும் செப்டிக் டேங்க்
/
அங்கன்வாடி அருகே திறந்து கிடக்கும் செப்டிக் டேங்க்
அங்கன்வாடி அருகே திறந்து கிடக்கும் செப்டிக் டேங்க்
அங்கன்வாடி அருகே திறந்து கிடக்கும் செப்டிக் டேங்க்
ADDED : மார் 04, 2025 06:13 AM

திருப்புவனம்: திருப்புவனம் புதுாரில் அங்கன்வாடி மையம் அருகே செப்டிக்டேங்க் மூடி சேதமடைந்து திறந்தே கிடப்பதால் பெற்றோர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
திருப்புவனம் 6வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 6வது வார்டில் அங்கன்வாடி மையம் அருகிலேயே சுகாதார வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதார வளாகம் போதிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளது.
மேலும் மகளிர் சுகாதார வளாகம் பின்புற செப்டிக் டேங்க் மூடி சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. அங்கன்வாடியில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில் செப்டிக் டேங்க் மூடி சேதமடைந்து இருப்பதால் பெற்றோர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
தி.புதுாரை சேர்ந்த பாரதி கூறுகையில், மகளிர்சுகாதார வளாகம் தண்ணீர்வசதி இருந்தும் பல ஆண்டுகளாக சேதமடைந்து பராமரிப்பு இன்றி உள்ளது. பெண்கள் சிரமத்தில் உள்ளனர். மேலும் சுகாதார வளாகம் அருகே செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் ஏராளமான குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகள் விளையாடும் போது செப்டிக் டேங்கில் விழுந்து உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சுகாதார வளாகத்தை அப்புறப்படுத்தி புதிய சுகாதாரவளாகம் அமைக்க வேண்டும், என்றார்.