/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நவீன மின் மயானம் திறப்பு: கோட்டாட்சியர்

ADDED : ஆக 27, 2024 06:19 AM
தேவகோட்டை : நவீன மின் மயானத்தை திறக்க சிலர் வீண் வதந்தியை கிளப்புகின்றனர் என கோட்டாட்சியர் பால்துரை தெரிவித்தார்.
தேவகோட்டையில் ரூ.ஒரு கோடி செலவில் கட்டப்பட்ட நவீன எரிவாயு மயானம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இது குறித்து தினமலர் நாளிதழ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்கிறது.
இந்நிலையில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் மின் மயானம் ஒரு கோடி செலவழித்தும் செயல்படுத்த முடியாமல் உள்ளது. ஒரு சிலர் எதிர்க்கின்றனர். நாங்கள் இரு தரப்பையும் அனுசரிக்க வேண்டியுள்ளது என்கிறார்.
கோட்டாட்சியர் பால்துரை கூறுகையில், மின் மயானத்தில் 75 அடி உயரத்திற்கு மேல் தான் புகை செல்லக் கூடிய நிலையில் உள்ளது. ஊருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ராம்நகர் மின் மயானத்தை பொறுத்தமட்டில் அந்த பகுதியில் உள்ள ஒரு சிலர் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஒரு கோடியில் மயானம்கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் என்ன பிரயோஜனம். உயர் அதிகாரிகளின் கேள்விகளால் உள்ளூர் அதிகாரிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். அப்பகுதி மக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி மயானத்தை திறக்க பொதுமக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.