ADDED : ஆக 24, 2024 03:46 AM
தேவகோட்டை: கண்ணங்குடி ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் சரவண மெய்யப்பன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சந்திரபோஸ் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
துணைத் தலைவர் பேசுகையில், முந்தைய ஆண்டில் விவசாயம் முழுவதும் பாதித்த நிலையில் அதிகாரிகள் முறையாக கணக்கிடாததால் பாதிப்பிற்கான எந்த நிவாரணமும் பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்கவில்லை. இழப்பீடு முறையாக கிடைக்க கலெக்டரிடம் முறையிட வேண்டும் என்றார்.
சமீபகாலமாக போதைப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் கண்ணங்குடி ஒன்றிய பகுதியில் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாதெனவும், மதுக்கடை இல்லாத ஒன்றியமாக கண்ணங்குடி ஒன்றியம் இருக்க வேண்டும் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது உள்ள கடைகளையும் அகற்ற கலெக்டரிடம் பரிந்துரைப்போம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

