/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எந்த திட்டமும் கொண்டு வராதவருக்கு ஓட்டா அ.தி.மு.க.,வேட்பாளர் பிரசாரம்
/
எந்த திட்டமும் கொண்டு வராதவருக்கு ஓட்டா அ.தி.மு.க.,வேட்பாளர் பிரசாரம்
எந்த திட்டமும் கொண்டு வராதவருக்கு ஓட்டா அ.தி.மு.க.,வேட்பாளர் பிரசாரம்
எந்த திட்டமும் கொண்டு வராதவருக்கு ஓட்டா அ.தி.மு.க.,வேட்பாளர் பிரசாரம்
ADDED : ஏப் 12, 2024 04:51 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே சூரக்குளம், நாட்டரசன்கோட்டையில் தேர்தல் பிரசாரம் நடந்தது. அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் அருள் ஸ்டீபன், பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோ, இணை செயலாளர் மாரி, மகளிரணி ஜாக்குலின், சூரக்குளம் புதுக்கோட்டை கிளை செயலாளர் ராமசந்திரன், நாட்டரசன்கோட்டை பேரூர் செயலாளர் கண்ணப்பன், தே.மு.தி.க., மாநில அமைப்பு செயலாளர் அங்கையற்கண்ணி, எஸ்.டி.பி.ஐ., நிர்வாகி மைதீன் பங்கேற்றனர்.
பிரசாரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர் தாஸ் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.2,500 தந்தோம். தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 தருவதாக சொல்லி ஏமாற்றி விட்டனர்.இக்கூட்டணியில் காங்., வேட்பாளர் கார்த்தி. அவர் ஓட்டு கேட்க வரமாட்டார். நன்றி சொல்ல வரமாட்டார். அவரது தந்தை சிதம்பரம் 7 முறை மத்திய அமைச்சராக இருந்தார்.
தொகுதிக்கு எந்த திட்டமும், வளர்ச்சி பணிகளும் செய்யவில்லை. மக்களை ஏமாற்றி ஓட்டுக்களை பெற்றதும் பிற நாடுகளுக்கு சென்று விடுவார்.
தொகுதிக்கு எந்த திட்டமும் கொண்டு வராமல் அலைக்கழித்தவருக்கு உங்கள் ஓட்டா என பார்க்க வேண்டும். நாட்டரசன்கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு மூடுவிழா கண்டவர் சிதம்பரம். காங்., வேட்பாளர் கார்த்தி செல்லும் இடமெல்லாம் மக்கள் விரட்டி அடிக்கின்றனர் என்றார்.

