/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை பழமலை நகரில் பைபாஸ் ரோடு பணிக்காக 9 வீடுகள் இடித்ததற்கு எதிர்ப்பு கலெக்டரிடம் மக்கள் புகார்

ADDED : மே 28, 2024 06:20 AM

சிவகங்கை : சிவகங்கை பழமலை நகரில் ரோடு பணிக்காகமுன்அறிவிப்பின்றி வீடுகளை இடித்ததை கண்டித்து, பழங்குடி நரிக்குறவர்கள் நேற்று கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.
சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் இருந்து இளையான்குடி ரோடு கல்குளம் வரை பைபாஸ் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பழமலை நகரில் பழங்குடி நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள 9 பேர்களின் வீடுகளை கடந்த சில நாட்களுக்கு முன் அகற்றினர்.
இதுகுறித்து தங்களுக்கு எந்தவித முன் அறிவிப்பும் செய்யவில்லை. மாற்று இடம் வழங்காமல், வீடுகளை இடித்து விட்டதை கண்டித்து, நேற்று தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணியன்,மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜாங்கம் ஆகியோர் தலைமையில் பழமலை நகரில் வசிப்பவர்கள் நேற்று கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.
3 சென்ட்டில் வீடுகலெக்டர் உறுதி
ஒருங்கிணைப்பாளர் ராஜாங்கம் கூறியதாவது:
கடந்த 62 ஆண்டுக்கும் மேலாக பழமலை நகரில் எங்கள் மக்கள் வசித்து வருகின்றனர். முன்அறிவிப்பின்றி ரோடு போடுவதற்காக 9 பேரின் வீடுகள்,விநாயகர், வீரமாகாளி கோயில், பழமையான மரங்களை அகற்றிவிட்டனர்.
எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி, அதில் வீடு கட்டித்தர வேண்டும் என கலெக்டரிடம் முறையிட்டோம். அவர் 3 சென்ட் இடத்தில் வீடு கட்டித்தர அரசின் ஒப்புதலுக்கு அனுப்புவதாக எங்களிடம் உறுதி அளித்தார்.
இடம் ஒதுக்கப்பட்டது
சிவகங்கை தாசில்தார் சிவராமன் கூறியதாவது:
பைபாஸ் ரோடு பணிக்காக 9 பேரின் வீடுகளை அகற்றியதற்கு முன் அவர்கள் தங்குவதற்காக 9 பேருக்கு தகர ெஷட் அமைத்து கொடுத்துள்ளோம். ஒரு குடும்பத்திற்கு 1.5 சென்ட் இடமும் வழங்கிவிட்டோம்.