/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
35 வருடம் ஒன்றுமே செய்யாதவர்கள் தற்போது செய்ய போகிறார்களாம்
/
35 வருடம் ஒன்றுமே செய்யாதவர்கள் தற்போது செய்ய போகிறார்களாம்
35 வருடம் ஒன்றுமே செய்யாதவர்கள் தற்போது செய்ய போகிறார்களாம்
35 வருடம் ஒன்றுமே செய்யாதவர்கள் தற்போது செய்ய போகிறார்களாம்
ADDED : ஏப் 07, 2024 05:56 AM
மானாமதுரை, 35 வருடம் எம்.பி.,யாகி அமைச்சராக இருந்த சிதம்பரம் ஒன்றுமே செய்யாமல் தற்போது மட்டும் செய்யப் போவதாக கூறி வருவது என்ன நியாயம் என்று அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
மானாமதுரையில் அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர்தாசை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:
அ.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் கிடையாது.இங்கு ஒன்றிய செயலாளராக இருந்தவருக்கு தான் பழனிசாமி சீட் வழங்கியுள்ளார்.
எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும் சரி எம்.பி.,யாக இருந்தாலும் சரி, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு தான் அ.தி.மு.க.,வில் சீட் வழங்கப்படும்.
மானாமதுரை தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்கள் கோடீஸ்வரர்களா, இங்கு 35 வருடம் எம்.பி.,யாக உள்துறை,நிதி அமைச்சராக சிதம்பரம் இருந்தார்.
அவர் இத்தொகுதியில் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம்.
ஆனால் இனிமேல் கொண்டு வருவதாக கூறுகிறார். 35 வருடம் எம்.பி.,யாக, அமைச்சராக இருந்துவிட்டு ஒன்றுமே செய்யாமல் இப்போது செய்யப் போவதாக கூறுவதில் என்ன நியாயம் என்றார்.
வேட்பாளர் சேவியர் தாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நாகராஜன் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயபிரகாஷ், ஸ்ரீதரன், மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து நிர்வாகிகள் விளத்துார் நடராஜன், அரசகுளம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

