sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி ஏராளமான பக்தர்கள் தரிசனம்

/

பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி ஏராளமான பக்தர்கள் தரிசனம்


ADDED : செப் 08, 2024 02:49 AM

Google News

ADDED : செப் 08, 2024 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நகரத்தார் குடவரைக்கோயிலான இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆக., 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை வெள்ளிக்கேடகத்தில் விநாயகர் புறப்பாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடந்தது. ஆறாம் நாளில் கஜமுகசூரசம்ஹாரமும், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடந்தது.

நேற்று காலை 9:50 மணிக்கு மூலவர் பிரதிநிதியாக அங்குசத்தேவர், தங்க மூஷிக வாகனத்தில் உற்ஸவ விநாயகர், சண்டிகேஸ்வரர் வெள்ளிக்கேடகத்தில் புறப்பாடு துவங்கியது. கோயிலை வலம் வந்து திருக்குளத்தின் தெற்கு படித்துறையில் எழுந்தருளினர்.

தொடர்ந்து தலைமைக்குருக்கள் பிச்சைச்சிவாச்சார்யார், ஸ்ரீதர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யார்களால் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்ப செட்டியார், பூலாங்குறிச்சி சுப.முத்துராமன் செட்டியார் முன்னிலையில் அங்குசத்தேவருக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சோமசுந்தரகுருக்களால் குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. பின் சுவாமி திருவீதி வலம் வந்து கோயிலில் சேர்க்கை ஆனது. மதியம் 1:20 மணிக்கு மூலவருக்கு அபிேஷகம் நடந்து தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

அடுத்து 18 படி அரிசியிலான 'மெகா' கொழுக்கட்டையான 'திருமுக்குறுணி மோதகம்' மூலவருக்கு படையல்இடப்பட்டது. முன்னதாக இரவில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வாகனங்களில் திருவீதி வலம் வந்தனர்.






      Dinamalar
      Follow us