ADDED : மார் 13, 2025 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் 56, இவர் திருச்சியில் போலீஸ் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் இறந்தார். அவரது உடல் மானாமதுரையில் உள்ளஅவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சிவகங்கை மாவட்ட எஸ்.பி.,ஆஷிஷ் ராவத், போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
மானாமதுரை ஆதனூர் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.